எண்ணிமச் செலாவணி மூதலீட்டளர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியாவாம்!
உலக அளவில் எண்ணிமச் செலாவணியில் அதிகமான முதலீட்டாளர்களை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான எண்ணிமச் செலாவணி உரிமையாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையானது உருசியா மற்றும் அமெரிக்க நாடுகளை விட அதிகமாகும். இந்தியாவில் 10.7 கோடி எண்ணிமச் செலாவணி உரிமையாளர்களும், அமெரிக்காவில் 2.78 மற்றும் உருசியாவில் 1.74 கோடி மக்களும் எண்ணிமச் செலாவணியில் முதலீட்டாளர்களாக உள்ளனர். இந்தியாவில் எண்ணிமச் செலாவணிகளுக்கு சட்டப்பாடாக எந்த ஊக்குவிப்பும் இல்லை என்றாலும் மக்களுக்கு எண்ணிமச் செலாவணி முதலீடுகள் மீதான ஆர்வம் மிகுந்தே வருகிறது. புரோக்கர் சூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எண்ணிமச் செலாவணியை அதிக அளவு வைத்திருக்கும் தனிநபர் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியர்கள் அதிக அளவில் எண்ணிமச் செலாவணி உரிமையாளர்களாக உள்ளதாக தெரிகிறது. மக்கள்தொகை அடிப்படையில் உலக அளவில் உள்ள எண்ணிமச் செலாவணி உரிமையாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உக்ரைன் 12.73 விழுக்காடு இரண்டாவதாக உருசியா 11.91 விழுக்காடு மூன்றாவது கென்யா 8.52 விழுக்காடு நா