எண்ணிமச் செலாவணி மூதலீட்டளர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியாவாம்!
இந்தியாவில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான எண்ணிமச் செலாவணி உரிமையாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையானது உருசியா மற்றும் அமெரிக்க நாடுகளை விட அதிகமாகும். இந்தியாவில் 10.7 கோடி எண்ணிமச் செலாவணி உரிமையாளர்களும், அமெரிக்காவில் 2.78 மற்றும் உருசியாவில் 1.74 கோடி மக்களும் எண்ணிமச் செலாவணியில் முதலீட்டாளர்களாக உள்ளனர்.
இந்தியாவில் எண்ணிமச் செலாவணிகளுக்கு சட்டப்பாடாக எந்த ஊக்குவிப்பும் இல்லை என்றாலும் மக்களுக்கு எண்ணிமச் செலாவணி முதலீடுகள் மீதான ஆர்வம் மிகுந்தே வருகிறது. புரோக்கர் சூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எண்ணிமச் செலாவணியை அதிக அளவு வைத்திருக்கும் தனிநபர் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியர்கள் அதிக அளவில் எண்ணிமச் செலாவணி உரிமையாளர்களாக உள்ளதாக தெரிகிறது.
மக்கள்தொகை அடிப்படையில் உலக அளவில் உள்ள எண்ணிமச் செலாவணி உரிமையாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உக்ரைன் 12.73 விழுக்காடு இரண்டாவதாக உருசியா 11.91 விழுக்காடு மூன்றாவது கென்யா 8.52 விழுக்காடு நான்காவது அமெரிக்கா 8.31 விழுக்காடு ஐந்தாவதாக இந்தியா 7.3 விழுக்காடு என்று வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
செயின் அனைலைசிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பு ஆண்டு எண்ணிமச் செலாவணி ஏற்புக்கான குறியீட்டை வெளியிட்டவுடன் அதைக் குறித்த அதிகப்படியான தேடல்கள் மற்றும் தகவல்களை ஆராய்ந்த நாடுகளிலும் இந்தியர்கள் முதலிடம் பெற்றுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் உருசிய நாட்டை சேர்ந்த மக்களும் முதன்மை இடம் பெறுகின்றனர்.
எண்ணிமச் செலாவணியை வேகமாக ஏற்றுக்கொள்வதில் 154 நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் எண்ணிமச் செலாவணிக்கான அதிகாரப்பாட்டு உரிமை வழங்குவதில் விரைவான செயல்பாடுகள் அமைந்தால் இந்தியாவின் எண்ணிமச் செலாவணிக்கான வளர்ச்சியும் மலைக்கத்தக்க வகையில் அமையும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
குமரிநாடன்