வென்வேல்சென்னி! படிக்க வேண்டிய கொண்டாட வேண்டிய வரலாற்று நாவல்.

இந்திய வரலாற்றில் பெரிதும் பேசப்படாத மூவேந்தர்களின் வீரம், தமிழர்களின் வீரத்தை பாரெங்கும் பறைசாற்றிய கரும்பெண்ணை ஆற்றங்கரை போர்க்களம். 

முற்காலச் சோழன் பேரரசன் இளஞ்சேட்சென்னியின் தலைமையில் சேர, சோழ, பாண்டியர்களும் இணைந்து வெற்றிவாகை சூடியதை கூறும் வரலாற்றுப் பெருங்கதையே சி.வெற்றிவேல் எழுதிய வென்வேல்சென்னி.

செந்தமிழ்மண்ணில் பெரும்படை திரட்டி, வடநாவலந்தேயத்தைத் தன் கைக்குள் வைத்திருத்த மோரிய பேரரசன் அசோகன் மட்டுமல்ல செந்தமிழ்மண்ணை கைப்பற்ற நினைக்கும் ஒவ்வொருவரையும் கதிகலங்க வைக்கும் ஒரு அளப்பரிய போரில், மௌரியர்களை தோற்கடித்து புறமுதுகிடச்செய்த பேரரசனின் பெருமையையும் வீரத்தையும் எடுத்துரைக்கும் ஓர் அழகிய படைப்பு.

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் வெற்றியை தொடர்ந்து, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று பார்ப்பதுபோல் தன் எளிய நடையில் கதைக்களத்தை தனக்கே உரித்தான பாணியில் இன்றைய தலைமுறையினரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கியிருக்கிறார் வெண்வேல் சென்னி பெருங்கதையை சி.வெற்றிவேல்

இந்த வரலாற்று நாவல், மூன்று பாகங்களாக ஆமேசான் கிண்டிலில் மின்நூலாகக் கிடைக்கிறது. அமேசான் கிண்டில் வழங்குகிற புதியவர்களுக்கான ஒரு மாத இலவச வாய்ப்பைப் பயன்படுத்திப் படிப்பதும் விலைக்கு வாங்கி உங்கள் மின்நூலகத்தில் iவைத்துக் கொண்டு படிப்பதும், பெருமை கொண்டாடுவதும் உங்கள் விருப்பம்.

பாகம் ஒன்று: வென்வேல் சென்னி பாகம் ஒன்று

பாகம் இரண்டு: வென்வேல் சென்னி பாகம் இரண்டு

பாகம் மூன்று: வென்வேல் சென்னி பாகம் மூன்று





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குச்சந்தை வருமானம்

இந்த இரண்டு நிறுவனங்களை என்பேசியின் முகப்புத் திரையில் வைத்துக்கொண்டாடுகிறேன். அன்றாடம் ஐம்பது வரை வருமானம் தந்துவரும் விருப்ப நிறுவனங்களாக

இயங்கலையில் வருமானம் ஈட்ட நான்காவது நிறுவனம்