வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்ட எதாவது வழி உண்டா?
வீட்டில் சும்மாதான் இருக்கிறேன், வீட்டிலிருந்தபடி வருமானம் ஈட்ட எதாவது வழி உண்டா? என்பது உங்களுக்குள் இருக்கிற ஆர்வத்தேடலாக இருந்தால், இந்தக் கட்டுரையில் நான் காட்டுவது சிறிய வகை வருமானம் ஈட்டுவதற்கான ஒத்தையடி பாதை
21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: உங்களிடம் ஆண்டிராய்டு செல்பேசி இருக்குமானால், (மாத்திரை, மடிக்கணினி, மேசைக் கணினி இருக்குமானால் மேலும் மேலும் சிறப்பு) இந்தக் கட்டுரையில் நான் உங்களுக்குக் காட்டுவது சிறிய வகை வருமானம் ஈட்டுவதற்கான ஒத்தையடி பாதை. அதில் பயணித்து நெடுஞ்சாலையை அடைந்து சாதிப்பது உங்கள் திறமை.
ஒரு காசு முதலீடு இல்லாமல், அமெரிக்க டாலராக வருமானம் தருவதற்கு சிலபல நல்ல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த வகை வருமானத்திற்கு நாம் மால்டிலெவல் மார்க்கெட்டிங்கில் போல ஆயிரம் பத்தாயிரம் என்று நமக்கு பயன்படாத எந்த பொருளையும் விலைகொடுத்து வாங்கத் தேவையெல்லாம் இல்லை. இதில்-
1. மிக முதன்மையாக விளம்பரம் பார்ப்பது.
2. கணக்கெடுப்பில் பங்கெடுப்பது. உங்களுக்கு விருப்பம் இருந்தால். அதற்கும் வருமானம் உண்டு. சில போதுகளில் இது அதிக நேரம் எடுத்துவிடுகிறது.
3. முடிந்தால், நமக்கு கீழாக உறுப்பினர்களைச் சேர்த்து விடுவது. இதில் நீங்கள் இணைத்தவர்கள் ஈட்டும் வருமானத்தில் பத்து விழுக்காடு ஆதாயம் தருகிற சிறப்பான பணியாகும்.
4. விரும்பினால், ஈட்டிய வருமானத்தில் இருந்தே நமக்குக் கீழாக உறுப்பினர் சேர்க்கும் வகைக்கு அந்த நிறுவனங்களிலேயே விளம்பரம் கொடுப்பது. என்கிற வேலைகளை மட்டும் செய்தால் போதும். இவையெல்லாம் எல்லோருக்கும் சாத்தியமானவைகள் தாமே!
நான் சிலபல நிறுவனங்களைக் கண்டறிந்து கொஞ்சமாக வருமானம் ஈட்டி வருகிறேன். கண்டறிவதற்கு இன்னும் நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. நீங்கள் என்னோடு தொடர்பில் வந்தால், நாம் ஒன்றிணைந்து வருமானம் ஈட்டலாம்.
அந்த வகைக்கு எனது 'நேர்நேர்காசு' வலைப்பூவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அந்தக் கட்டுரைகளைப் படித்து நீங்களும் நாங்கள் பரிந்துரைக்கும் இணைப்புகள் மூலமாக பதிவு பெற்று வருமானம் ஈட்டலாம். அதற்கான உங்கள் ஐயங்களை எங்கள் மின்அஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். எங்கள் மின்அஞ்சல் முகவரி: kumarinadanr@gmail.com
முதலாவதாக ஒரு நல்ல நிறுவனத்தை மகிழ்ச்சியோடு அறிமுகப்படுத்துகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் வருமானம் ஈட்டிவரும் 'காயின்பேயூ' நிறுவனத்தில் எனக்குக் கீழாக உறுப்பினராக இணைந்து வருமானம் ஈட்டுவதற்கு கீழ் கண்ட இணைப்பில் சென்று பதிவு செய்துகொள்ளுங்கள். https://www.coinpayu.com/?r=Kumarinadan
அன்றாடம் ஓர் இருபது மணித்துளிகள் செலவு செய்தால் போதும். நூறு பிட்காசு சடோசிகளில் இருந்து இருநூறு பிட்காசு சடோசிகள் வரை வருமானம் பார்க்கலாம். தற்போதைய நிலையில் நூறு பிட்காசு சடோசி என்பது இரண்டு ரூபாய் ஆகும்.
உங்கள் வருமானத்தை உயர்த்துவதற்கு நண்பர்களை இந்தத்திட்டத்தில் உங்கள் இணைப்பில் கீழ் இணைக்க வேண்டும். ஒரு காசு செலவில்லாமல் விளையாட்டுப் போக்கில் வருமானம் ஈட்டலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,395.
கருத்துகள்
கருத்துரையிடுக
குமரிநாடன்