நம்முடைய தலையெழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா! என் இரண்டாவது மின்நூல்
மந்திரம் என்பது தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலை ஆகும். மற்ற ,ரண்டு கலைகளில் முதலாவது சோதிடம், சாதகம் உள்ளிட்ட நிமித்தகம் ஆகும். ,ரண்டாவது கணியம் ஆகும்.
மந்திரக் கலையில்- நிமித்தகத்தைப் பற்றியோ கணிக்கலை பற்றியோ கவலைப்படவே வேண்டாம்.
உங்கள் வாழ்க்கையின் போக்கை உங்கள் அறிவு வளர்ச்சிக்குத் தக்கபடி அவ்வப்போது கட்டமைத்துக் கொள்ள முடியும். உங்கள் தலையெழுத்தை நீங்களே எழுதிக் கொள்ள முடியும்.
உண்மையில் தலையெழுத்து என்பது மதங்கள் தெரிவிப்பது போல மனிதன் மண்டையோட்டில் காணப்படுகிற கிறல்கள் அல்ல. உங்களுக்கான தலையெழுத்து என்பது: ஐந்திர ஆற்றல்களில் (பஞ்சபூதம்) ஒன்றான விசும்பு என்கிற வண்தட்டுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கை ,ப்படித்தான் அமைய வேண்டும் என்று வடிவமைத்துக் தருகிற மென்பொருள் ஆகும். உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பதிற்கு நீங்கள் எழுதிக் கொள்கிற கலை மந்திரம்.
இந்தக் கலையின் அடிப்படையை புரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையில் எல்லையில்லாத முன்னேற்றத்தை முன்னெடுக்க ,ந்த நூல் உதவும்.
அமேசான் கிண்டிலில் நான் வெளியிட்டுள்ள ,ந்த நூலை ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கி எப்போது வேண்டுமானலும் நீங்கள் படித்துக் கொள்ள முடியும்.
அமேசன் கிண்டில் தருகிற ஒரு மாத ,லவச சலுகையிலும் நீங்கள் ,ந்த நூலை படிக்க முடியும்.
இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகளின் தலைப்புகள்:
1. நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா!
2. நீங்கள்தாம் உங்கள் தலைஎழுத்தை எழுதிக் கொள்கின்றீர்கள்! யாரும் உங்கள் தலைஎழுத்தில் மாற்றம் செய்ய ,யலாது
3. கடவுள்- ஆண்பாலோ, பெண்பாலோ அல்ல் ஒன்றன்பால்!
4. மந்திரம் என்பது மாயமல்ல மனஆற்றல்.
5. மந்திரமா! மாயமா! எதை நாம் கற்றுத் தெளிய அல்லது தேற முடியும்.
6. மந்திரக்கலையில் கோட்பாடாகக் கற்கவேண்டிய பகுதி மிகமிகக் குறைவே. நடைமுறையே அதிகம்
7. திருக்குறள் மந்திரக்கலைக்கான பாடப்புத்தகமே என்பதறிவோம்.
8. பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் வரிசையில்- காப்பு!
9. பல நூறு தமிழ்ச் சொற்களின் வரையறைகள் வரிசையில்- ஐந்திரம்!
10. உலகம் முதலில் எப்படி தோன்றியது? முதல் மனிதன் உருவானது எப்படி?
கருத்துகள்
கருத்துரையிடுக
குமரிநாடன்