என் மின்நூல்! குமரிநாடன் கட்டுரைகள்


நான் வெளியிட்ட முதல் மின்நூல் குமரிநாடன் கட்டுரைகள் என்ற நூல் ஆகும். இந்த நூலை அச்சுப்பதிப்பாகவும் வெளியிட்டுள்ளேன். இந்த நூல், நான் மௌவல் செய்திகள் ஆசிரியர் பக்கத்தில் வெளியிட்டு வந்திருந்த இருபது கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.

குமரிநாடன் கட்டுரைகள் அச்சு நூலுக்கு அசிரியர் அறிமுக உரை வழங்கியிருந்தவர் பாவலர் செ.சி.இளந்திரையன் ஆவார்கள்.

அவரின் அந்த அறிமுக உரை:-

'குமரிநாடன் கட்டுரைகள்' நூலாசிரியர் குமரிநாடன், தமிழியச் சிந்தனை கொண்ட ஆகச்சிறந்த எழுத்தாளர். பள்ளி நாட்களிலேயே 'தமிழ்இயக்கம்' என்னும் அமைப்பைத் தொடங்கி பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி தமிழ்ப் பணியாற்றியவர்.

தமிழியல் கல்வித்தளம் என்ற பெயரில் தாய்த்தமிழ் பள்ளியைத் தொடங்கி நடத்தி தமிழ்வழிக் கல்வியை ஊக்கப்படுத்தியவர். 'விசும்பு' என்னும் மாதஇதழ் நடத்தி அதன்வழியாகப் பல படைப்பாளிகளை உருவாக்கியவர். தமிழ்நாட்டில் பல பருவ ஏடுகளிலும் தனது படைப்புக்களை பதியச் செய்தவர்.

மேட்டூர்த் தமிழ்ச்சங்கம், மேட்டூர் அனல்மின்நிலைய இலக்கிய வட்டம், கே.ஆர்.ஜி.நாகப்பன் - இராஜம்மாள் அறக்கட்டளை, கலை சிற்றிதழ், பன்னாட்டு தமிழுறவு மன்றம், மால்கோ தமிழ் இலக்கிய மன்றம் போன்ற பல அமைப்பகள் வழங்கிய விருதுகளும் பாராட்டுக்களும் இவருக்கான விழுமியங்கள் ஆகும்.

கடந்த பத்து ஆண்டுகளாக 'மௌவல் செய்திகள்' என்ற இயங்கலை இதழில் தமிழ் தமிழர் மேம்பாட்டுக்கான கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த கட்டுரைகளில் சிலவற்றால் இவர் உருவாக்கியுள்ள இந்த 'குமரிநாடன் கட்டுரைகள்' என்ற இந்த நூல் இவருக்கான அடையாளமாக அமையும். வாழ்த்துக்களுடன்- செ.சி.இளந்திரையன். உலகத்தமிழ்க் கழகம்.

எனது முதல் மின்நூல் குமரிநாடன் கட்டுரைகளில் இடம்பெறும் இருபது கட்டுரைகளின் தலைப்புகள்:

1. பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எவ்வாறு தனித்துவமானது?

2. தாய், தன் மூச்சுக்காற்றால் அறிவூட்ட, கிடைத்த மொழிக்கு நன்றி பாராட்டுவதே திருக்குறளின் முதல் அதிகாரம்

3. பெண்குழந்தைகளுக்கானஇயல்பானதமிழ்ப் பெயர்கள்!

4. திருமணம் உலகிற்கு தமிழர் அளித்த கொடை!

5. துவர்ப்பு குறித்த ஒரு தமிழ்மருத்துவ அனுபவம்!

6. மற்றவர்கள் தொன்மங்களை ஒருபோதும் தமிழர்கள் கொண்டாட முடியாது! கொண்டாடுவது-ஏற்பது இகழ்ச்சியாகிப் போகும்

7. தனிமனித முன்னேற்றத்திற்கான மூன்று கலைகள்! தமிழில் இருக்கின்றன

8. நெஞ்சம் மறக்காத நூல்! 'தென் அமெரிக்காவின் சோழர்கள்' என்ற தலைப்பில் மீ. மனோகரன் அவர்கள் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்

9. பணம் ஏன் பெரும் பணக்காரர்களிடமே சேர்கிறது!

10. தமிழைவளர்க்க தனிமனிதனாக நான் என்ன செய்ய முடியும்! ஆக்கப்பாடு மிக்க பதிலை எதிர்பார்க்கிறேன்

11. கலி! தமிழ்ச் சொற்கள் வரிசையில்

12. மந்திரம். தொடர்கட்டுரை: 1.நம்முடைய தலை எழுத்தை நாமே எழுதிக் கொள்வதுதான் மந்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா!

13. முன்னெடுத்தது வணிகம்- திணிப்பு அல்ல! உலகின் பொது மொழியாக நேற்று இருந்தது தமிழ். இன்று இருப்பது ஆங்கிலம்.

14. கணியக்கலை தொடர்கட்டுரை: 1.நியுமாராலஜி என்கிற எண்ணியலின் தமிழ் மூலம் கணியக் கலை ஆகும்.

15. தமிழர் மெய்யியலில் உலகத்தோற்றம்

16. இந்தியாவிற்கான பெயர்க்காரணம் தெரிந்தால் அசந்து போவீர்கள்!

17. முழுப்பாடல் தெரிவிப்பது என்ன? 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இந்த வரி தெரியாத தமிழர் இருக்க மாட்டார்கள்.

18. தமிழ்படித்து தமிழுக்கு சாதித்த உலக அறிஞர்கள்! ஆங்கிலம் படித்து ஆங்கிலத்திற்கு எதுவும் சாதிக்க முடியாத தமிழர்கள்

19. 'முதல் எனப்படுவது இடமும் காலமும்' சொன்னது நம் பாட்டனார் தொல்காப்பியன்! உணர்ந்தோமா இற்றைத் தமிழர்

20. உலகினர் போற்றிக் கொண்ட தமிழ்ச்சொற்கள்! உலகம், நாவலந்தேயம், தமிழ்நாடு

அமேசான் கிண்டில் பதிப்பில் இதுவரை எனது பதினெட்டு மின்நூல்கள் வெளியாகியுள்ளன. அவைகளை விலை கொடுத்து, உங்கள் மின்நூலகத்தில் நிரந்தரமாக வைத்துக் கொண்டு, எப்போது வேண்டுமானாலும் படித்துப் பயன்பெற முடியும். புதிய உறுப்பினர்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவசமாக படித்து மகிழவும், அமேசான் கிண்டில் பதிப்பகம் வாய்ப்பு வழங்குகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பங்குச்சந்தை வருமானம்

இந்த இரண்டு நிறுவனங்களை என்பேசியின் முகப்புத் திரையில் வைத்துக்கொண்டாடுகிறேன். அன்றாடம் ஐம்பது வரை வருமானம் தந்துவரும் விருப்ப நிறுவனங்களாக

இயங்கலையில் வருமானம் ஈட்ட நான்காவது நிறுவனம்