மின்சாரம் இனிய தமிழில்! என் மூன்றாவது மின்நூல்
மின்சாரம், என்ற தலைப்பிற்குள் போனவுடன்- தண்ணீரில் இருந்து, நிலக்கரியில் இருந்து எல்லாம் மின்சாரம் எடுப்பது போல் வேறு எது எதில் இருந்து மின்சாரம் எடுக்க முடியும்? நம் உடலில் கூட மின்சாரம் இருக்கிறதாமே? மின்சாரத்தை சேமிக்க முடியுமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுவது இயல்புதான். அதற்கு முன்னால் மின்சாரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோமேயானால் அதிலேயே இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும். அதற்கான ஒன்பது கட்டுரைகளுடன் இனியதமிழில் முன்னெடுக்கப்பட்ட நூல் இது.
மின்சாரம் கட்டுரை ஒன்று, மி;ன்சாரத்தின் அடிப்படைகள் குறித்து விளக்கும்.
மின்சாரம் கட்டுரை இரண்டு, மின்சாரத்தின் உற்பத்தி முறைகள் குறித்து விளக்கும்.
மின்சாரம் கட்டுரை மூன்று, மின்சாரம் என்றால் என்ன? என்பது குறித்து விளக்கும் வகைக்கானது ஆகும்ஃ
மின்சாரம் கட்டுரை நான்கு, மின்வாரியத்தால் நமக்கும் மின்சாரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது குறித்தது ஆகும்.
மின்சாரம் கட்டுரை ஐந்து, பெரும்பாலும் பேரளவு மின்சாரம் உலகம் முழுவதும் ஒரே அடிப்படையில்தான் தயாரிக்கப் படுகிறது என்பதை விளக்குவது ஆகும்.
மின்சாரம் கட்டுரை ஆறு, சூரிய ஒளியல் இருந்து மின்சாரம் பெறுவது குறித்தான கட்டுரை ஆகும்.
மின்சாரம் கட்டுரை ஏழு, மின்சார கம்பியில் அமரும் பறவைகள் பாதிக்கப்படுவதில்லை ஏன் என்பதற்கான விளக்கம் குறித்தது.
மின்சாரம் கட்டுரை எட்டு, மின்சார இணைப்பு வகைகள் குறித்து விளக்குகிறது.
மின்சாரம் கட்டுரை ஒன்பது, உங்கள் வீட்டிற்கு செய்யப்படும் பாதுகாப்பான மின்அமைப்பு முறையை விளக்குகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக
குமரிநாடன்