விலைக்குறைப்பு சலுகையோடு ஐந்தாம்தலைமுறை (5ஜி) சாம்சங் மிடுக்குப்பேசி!
சில நிறுவனங்கள் தரமான 5த மிடுக்குப்பேசிகளுக்கு விலைகுறைப்பு அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது சாம்சங் நிறுவனமும் ஒரு அசத்தலான 5த மிடுக்குப்பேசிக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது.
ஐந்தாம் தலைமுறை இணையச் (5ஜி) சேவை அதற்கான அலைக்கற்றை ஏலங்கள் எல்லாம் முடிந்து விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.
தற்போது 5த பேசிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில் சில செல்பேசி நிறுவனங்கள் அருமையான 5த மிடுக்குப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றன.
சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ22 5த (Samsung Galaxy A22 5G) மிடுக்குப்பேசிக்குத்தான் விலைகுறைப்பு அறிவித்துள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளக சேமிப்பு ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ22 5த மிடுக்குப் பேசியின் முந்தைய விலை ரூ.22,499- ஆக இருந்தது.
ஆனால் தற்போது இந்த வகைபேசியை ரூ.18,490- விலையில் வாங்க முடியும்.
அதேபோல் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளகசேமிப்பு ஆதரவு கொண்ட வகையின் முந்தைய விலை ரூ.23,999-ஆக இருந்தது.
தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.20,899- விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ22 5த மிடுக்குப்பேசியில் தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 700 பிராசஸர் ஆதரவு உள்ளது. எனவே விளையாட்டு, காணொளி திருத்தம் போன்ற வசதிகளுக்கு இந்த மிடுக்குப்பேசி அருமையாக உதவும்.
குறிப்பாக ஒன்யுஐ 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன். மேலும் இந்தபோனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
இந்த கேலக்ஸி ஏ22 5த மிடுக்குப்பேசியில் 48எம்பி முதன்மை சென்சார் 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற மூவடுக்கு பின்பக்க படக்கருவி அமைப்பை கொண்டுள்ளது.
பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல படக்கருவி அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். மேலும் தம்படங்களுக்கும், காணொளி அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி படக்கருவி ஆதரவை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்.
இந்த சாம்சங் பேசி 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 1டிபி வரை சேமிப்பு நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.
நினைவக அட்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. 5000 எம்ஏஎச் மின்கலம் மற்றும் 15 வாட்ஸ் விரைவு மின்னேற்ற ஆதரவைக் கொண்டுள்ளது.
5த, 4த எல்டிஇ, வைபை, புளூடூத், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது. இந்த மிடுக்குப்பேசியின் எடை 203 கிராம் ஆகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக
குமரிநாடன்