பங்குச்சந்தை வருமானம்
பங்குச் சந்தையின் அடிப்படைதான் முதலீடு. ஆனால் பங்கு சந்தையின் போக்கு முதலீட்டுக்கு ஆதாயம் பார்க்கிற வகைக்கு இல்லை. பெரும்பாலான பங்குகளில் முதலீடு செய்து விட்டு ஒரு மாதம் கவனிக்காமல் விட்டாலே, நீங்கள் வாங்கிய பங்கின் விலை சரிந்து, உங்கள் முதலீட்டில் கொஞ்சம் விழுக்காடு காணாமல் போயிருக்கும். பங்குச் சந்தையில் ஆதாயம் பார்க்க முதலீடு செய்யக்கூடாது. சேமிக்க வேண்டும். பங்கு விலை இறங்கும் போதெல்லாம் ஒவ்வொரு பங்காக வாங்கிக் கொண்டிருக்க வேண்டும். பங்குவிலை ஏறும்போது ஆதாயம் கணக்கிட்டு தொகுப்பாக விற்க வேண்டும். இன்னும் விலை எறும் போது ஆதாயம் கணக்கிட்டு இன்னொரு தொகுப்பை விற்க வேண்டும். இப்படி தொடர் வணிகமாற்றினால் பங்குச்சந்தையில் உறுதியாக ஆதாயம் பார்க்க முடியும். இந்த வகையான வணிகமாற்றலுக்கு நீங்கள் வாங்கும் பங்கின் அடர்த்தி கோடிக்கணக்கில் இருக்க வேண்டும். அடிக்கடி ஏற்றஇறக்கம் அடையும் பங்குகளே இந்த வகைக்குத் தோதுப்படும். நிறைய பங்குகளில் சேமிக்கவும் கூடாது, வணிகமாடவும் கூடாது. நல்லதொரு பங்கை தேர்ந்தெடுத்து அந்தப் பங்கில் மட்டும் வணிகமாடலாம். விலை நூறுக்கு குறைந்த விலையுள்ள பங்கையோ, ஐநூறுக்கு அதிகமான
கருத்துகள்
கருத்துரையிடுக
குமரிநாடன்