ஒளவைபெருமாட்டியின் பதின்மூன்று கட்டளைகள்! திருக்குறளின் ஒற்றைச் சொல்லின் விளக்கமாக
திருவள்ளுவப் பெருந்தகை, நமக்கான தலைஎழுத்தை நாம்தாம் எழுதிக்கொள்கின்றோம் என்பதாக, எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின் என்ற குறளில், தெரிவிக்கிறார். எது கேட்டாலும் உங்களுக்கு கிடைக்கும். கேட்காமல் இருப்பது நீங்கள்தான் என்று நம்முடைய தலைஎழுத்தை வெற்றிக்கோ தோல்விக்கோ அமைத்துக்கொள்வது நாம்தாம் என்று தெரிவிக்கிறார். அதில் நமக்குத் தேவையான பொருட்களை (விசும்பில்) கேட்டுப்பெற, நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாக திண்ணியராகுக என்கிறார். திருவள்ளுவர் தெரிவிக்கிற அந்த திண்ணியராதலுக்கான நடைமுறை என்ன என்பதை ஒளவைப் பெருமாட்டி தனது பனிரெண்டு உயிரெழுத்துத்துத் தொடர்களிலும் ஒரு ஆய்த எழுத்துத் தொடரிலும் அமைத்து, திண்ணியராதலுக்கு நமக்கான பதின்மூன்று கட்டளைகளைத் தருகிறார். 1. அறம் செய விரும்பு உங்கள் தலை எழுத்தை நீங்களே எழுதிக் கொள்கின்றீர் என்பதே தமிழ்முன்னோரின் தெளிந்த முடிவு. அதனால் உங்களுக்கான அறத்தை நீங்களே செய்ய விரும்புங்கள். 2. ஆறுவது சினம் உங்களுக்கு யார்யாரோ கெடுதி செய்வதாக, நீங்கள் கொள்ளுகிற சினத்தால், எதையும் உங்களால் மாற்றிவிட முடியாது. சினமும் ஆறிவிடும். ஆன