இடுகைகள்

செப்டம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உங்கள் பெயரின் கணியக்கலை இயல்பு அறிய ஆர்வமா?

படம்
உங்கள் பெயரில் அமைந்துள்ள ஒலியன் அடிப்படையில் உங்களுக்கு ஓர் இயல்பு உங்கள் பெற்றோரால் அடையாளமாக்கப் பட்டிருக்கிறது. உங்களாலும், மற்றோராலும் உங்கள் பெயர் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படும் போது உங்களுக்கு அந்த இயல்பு வலுவாக்கப்படுகிறது. உலகில் உள்ள அனைத்தும்  வேறு  வேறு இயல்புகளைக் கொண்டிருப்பதற்குக் காரணம் அதன் உள்ளமைந்த எண்ணிக்கை மாற்றமே ஆகும்.  ஒரு நிரையும் (புரட்டான்) ஒரு நேரும் (எலக்ட்ரான்) இருந்தால் நீரியம் (ஹைட்ரஜன்) என்கிற காற்றாக இருக்கிற நிலையில்,  பதினோரு நிரையும் (புரட்டான்) பதினோரு நேரும் (எலக்ட்ரான்) இருந்தால் சோடியம் என்கிற உப்பு என்று இயல்அறிவும் (சயின்சும்) நிறுவியுள்ளது அல்லவா?   அடிப்படை இயல்புகளாக 1.உழைப்பு 2.நிருவாகம் 3.முனைப்பு 4.பயணம் 5.கலை 6.தொழில்நுட்பம் 7.கமுக்கம் 8.புகழ் 9.தனித்துவம் என்பனவற்றை தமிழ்முன்னோரின் இரண்டாவது முன்னேற்றக் கலையான கணியக்கலை பட்டியல் இடுகிறது. உங்கள் பெயரின் இயல்பு என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டு தொடர்ந்து வெற்றிகளை ஈட்டவும், சிறு சிறு வெற்றிகளைக் கொண்டாடி பெரிய வெற்றிகளுக்குப் பாதை அமைக்கவும் எனது வாழ்த்துக்கள். உங்கள் இயல்பு என்ன? அற

பங்குச்சந்தை வருமானம்

படம்
பங்குச் சந்தையின் அடிப்படைதான் முதலீடு. ஆனால் பங்கு சந்தையின் போக்கு முதலீட்டுக்கு ஆதாயம் பார்க்கிற வகைக்கு இல்லை. பெரும்பாலான பங்குகளில் முதலீடு செய்து விட்டு ஒரு மாதம் கவனிக்காமல் விட்டாலே, நீங்கள் வாங்கிய பங்கின் விலை சரிந்து, உங்கள் முதலீட்டில் கொஞ்சம் விழுக்காடு காணாமல் போயிருக்கும். பங்குச் சந்தையில் ஆதாயம் பார்க்க முதலீடு செய்யக்கூடாது. சேமிக்க வேண்டும். பங்கு விலை இறங்கும் போதெல்லாம் ஒவ்வொரு பங்காக வாங்கிக் கொண்டிருக்க வேண்டும். பங்குவிலை ஏறும்போது ஆதாயம் கணக்கிட்டு தொகுப்பாக விற்க வேண்டும். இன்னும் விலை எறும் போது ஆதாயம் கணக்கிட்டு இன்னொரு தொகுப்பை விற்க வேண்டும். இப்படி தொடர் வணிகமாற்றினால் பங்குச்சந்தையில் உறுதியாக ஆதாயம் பார்க்க முடியும். இந்த வகையான வணிகமாற்றலுக்கு நீங்கள் வாங்கும் பங்கின் அடர்த்தி கோடிக்கணக்கில் இருக்க வேண்டும். அடிக்கடி ஏற்றஇறக்கம் அடையும் பங்குகளே இந்த வகைக்குத் தோதுப்படும். நிறைய பங்குகளில் சேமிக்கவும் கூடாது, வணிகமாடவும் கூடாது. நல்லதொரு பங்கை தேர்ந்தெடுத்து அந்தப் பங்கில் மட்டும் வணிகமாடலாம். விலை நூறுக்கு குறைந்த விலையுள்ள பங்கையோ, ஐநூறுக்கு அதிகமான