இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எளிமையான முயற்சியில் கொஞ்சமான வருமானம்

படம்
 பத்தாண்டுகளுக்கு முன்பு எளிமையான வருமானம் என்று தேடத் தொடங்கினாலே உடனே முன் வந்த நின்றது மல்டிலெவல் மார்க்கெட்டிங் என்கிற தலைப்பே.  அதில் இழந்தவர்கள் என்று யாரும் இல்லை என்றாலும், சம்பாதித்தவர்கள் என்றும் பெரிதாக யாரும் இல்லை என்பதே உண்மை.  அந்த மாற்று வணிகமுறை- முன்னெடுத்த நிறுவனங்களுக்கும் கூட அவ்வளவாக பெரிய ஆதாயத்தைத் தரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கானவர்கள் களத்தில் இருந்தார்கள். தற்போது உண்மையிலேயே அது போல முயற்சியில் இறங்கினால் ஓரளவிற்கு வருமானம் பார்க்க முடியும் என்கிற நிலையை தற்போது பிட்காயின் என்கிற தலைப்பு கொண்டு வந்திருக்கிறது.  ஓராண்டுக்கு முன்னால் பிட்காயின் பரிமாற்றத்தில் இந்தியர்கள் ஈடுபட முடியாது. தடை இருந்தது; தண்டனையும் பெரிதாக இருந்தது. தற்போது இந்தியாவில் பிட்காயினுக்கு தடை நீக்கப்பட்டிருப்பதால், பிட்காயின் மூலம் நாம் வருமானம் பார்ப்பதற்கு நிறைய வழிகள் திறந்திருக்கின்றன. இந்த வகை வருமானத்திற்கு நாம் மால்டிலெவல் மார்க்கெட்டிங்கில் போல ஆயிரம் பத்தாயிரம் என்று நமக்கு பயன்படாத எந்த பொருளையும் விலைகொடுத்து வாங்கத் தேவையெல்லாம் இல்லை. இதில்- 1.விளம்பரம் பார்ப்பது. 2.கணக்கெடு